ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் பதவி ஏற்று கொண்டார். இந்த விழாவில் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஜெகன் மோகன் ஒரு இளம் தலைவர். அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. தெலங்கானாவுக்கும், ஆந்திராவிற்கும் சுமூகமான உறவு தொடர்ந்தால்தான் இரு மாநிலத்திற்கும் வளர்ச்சி ஏற்படும். ஜெகன் முதலமைச்சராக ஒரு முறையல்ல... நான்கு முறையாவது தொடர வேண்டும்" என்றார்.
ஒருமுறை அல்ல... நான்கு முறை நீதான் முதலமைச்சராக வர வேண்டும்..! - கேசிஆர் ஆசை - ஜகன் மோகன் ரெட்டி
ஹைதராபாத்: "ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று அல்லது நான்கு முறை ஜெகன் மோகன் ரெட்டி தொடர வேண்டும்" என்று, தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜகன் மோகன் ரெட்டி
இதற்கு பிறகு பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, "இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களுக்கு இடையேயும் நல்லுறவு தொடர வேண்டும். என்னுடைய ஆட்சி அதனை செய்யும்", என்றார்.