ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி கோயில் அர்ச்சகர்கள் வாழ்த்து - திருப்பதி கோயில் குருக்கள்
அமராவதி : ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
ஜெகன்மோகன்ரெட்டி
அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் புதிய முதலமைச்சராக வருகின்ற 30ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையொட்டி திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தலைமையில் அலுவலர்கள் வேத பண்டிதர்களுடன், கிருஷ்ணா மாவட்டம், தாடேப்பள்ளியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டிற்கு சென்று தீர்த்த பிரசாதங்களை வழங்கி ஜெகன்மோகன் ரெட்டியை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினர்.