ஆந்திர மாநிலத்தில் 175 மக்களவைத் தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியானது.
திருப்பதியில் தரிசனம் செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி! - விஜயவாடா
அமராவதி: நாளை ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதிவியேற்க உள்ள நிலையில், இன்று அவர் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
jagan-mohan-reddy
இதில் 151 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தனி பெரும்பான்மையுடன் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில், நாளை விஜயவாடாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.