மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆந்திர மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதில், ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து மற்ற நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளைப் போல் ஆந்திர மாநில தொழில்துறையை உருவாக்குவதற்கும், வளர்ச்சி வழியில் செல்வதற்கும் சிறப்பு அந்தஸ்து தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடப்பாவில் கட்டப்பட்டுவரும் எஃகு ஆலை, ராமாயபட்டிணத்தில் கட்டப்பட்டுவரும் துறைமுகம், காக்கிநாடாவில் கட்டப்படும் கெமிக்கல் ஆலை ஆகிய பணிகளை முடிப்பதற்கு தேவையான நிதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.