அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி
நினைத்து பார்க்க முடியாத அளவு பெரும்பான்மையை பெற்று ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சி அமைக்கவுள்ளார்.
jagan mohan reddy
ஆந்திரப் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மிக மோசமான நிலையில் உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 143 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது பெரும்பான்மையை காட்டிலும் மிக அதிகம். ஜெகன் மோகன் ரெட்டி அசுர பலத்துடன் ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்து குவிந்துவருகிறது.