அரசியலில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷட்டர், "இந்த கருத்துகளை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தேவகவுடாவும், குமாரசாமியும் நாடகம் ஆடுகிறார்கள். எப்போது தேர்தல் நடந்து தோற்றாலும் அவர்கள் முதலை கண்ணீர் வடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தந்தையும், மகனும் நாடகம் ஆடுகிறார்கள் - ஜெகதீஷ் ஷட்டர் - கர்நாடகா
பெங்களூரு: தேவகவுடாவும், குமாரசாமியும் நாடகமாடுகிறார்கள் என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெகதீஷ் ஷட்டர்
நான் இதனை எண்ணிலடங்காத முறை கேட்டிருக்கிறேன். தேவுகவுடா குடும்பத்தினர் எப்போதும் இப்படித்தான். பேசுவதை எப்போதும் கடைபிடிக்கமாட்டார்கள். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு கர்நாடகா அமைச்சரவை அமைக்கப்படும்." என்றார்.
Last Updated : Aug 4, 2019, 10:55 PM IST