அலிபாபா குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான ஜேக் மா, ட்விட்டரில் புதிய கணக்கைத் தொடங்கியுள்ளார். இந்தக் கணக்கைத் தொடங்கியதுமே சில மணித்துளிகளில் அவரைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை (பாலோயர்கள்) 88.3 ஆயிரத்தை தொட்டுவிட்டது. தற்போது, 151.9 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்தே மூன்று ட்விட்கள் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள முதல் ட்வீட்டில், “ஷாங்காயிருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு முகவுறைகளும், கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் சோதனை சாதனங்களும் அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருக்கும் என் நண்பர்களுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், ஜேக் மா அறக்கட்டளை, அலிபாபா அறக்கட்டளை இரண்டும் இணைந்து கொரோனா பாதித்த நாடுகளான ஜப்பான், கொரியா, ஈரான், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அத்தியாவசியமான பொருள்களை கொடுத்தது குறித்து குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, அமெரிக்காவுக்கு ஐந்து லட்சம் வரையிலான கொரோனா சோதனை சாதனங்களும், ஒரு மில்லியன் வரையிலான முகவுறைகளும் அனுப்பட்டுள்ளன. என்னுடைய சொந்த நாட்டில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, இந்தச் சோதனை சாதனங்களை வேகமாகத் தயாரிக்க முடிந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்கள் தற்போது வைரலாகிவருகின்றன.
இதையும் படிங்க: நவ்ஜோத் சிங் சித்துவுடன் மோதலா? கேப்டன் அமரீந்தர் சிங் பதில்!