ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் 48 மத்திய சட்டங்களும், 167 மாநில சட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டன. மேலும் 44 மத்திய சட்டங்கள், 148 மாநில சட்டங்களை அமல்படுத்துவதற்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு காலகட்டத்தில் அங்கு பயங்கரவாதம் தொடர்பான நிகழ்வுகள் மிகவும் குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், பயங்கரவாத குற்ற சம்பவங்கள் 63.93 விழுக்காடு குறைந்துள்ளது. மேலும், சிறப்பு படையினர் உயிரிழப்பு 29.11 விழுக்காடும், பொதுமக்கள் உயிரிழப்பு 14.28 விழுக்காடும் குறைந்துள்ளது.