ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையில் ராணுவம் அம்மாநில காவல்துறையுடன் சேர்ந்து தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இச்சூழலில் நேற்று (ஆக்.29) ஒரே நாளில் இரண்டு முக்கிய பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையைப் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். இதுதொடர்பாக, ராணுவ மேஜர் ஜெனரல் சென்குப்தா பேசுகையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவத்தினருக்கு கிடைத்த முக்கிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில் பயங்கவரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது நடைபெற்ற மோதலில் எட்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஒருவர் சரண் அடைந்துள்ளார். உயிரிழந்த அனைவரும் இளைஞர்கள், இவர்கள் அனைவரும் நிகழாண்டு (2020) தொடக்கம் முதல் பயங்கரவாதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.