ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இரண்டு பயங்கரவாதிகள் பற்றிய தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என தோடா காவல் துறை சார்பாக வங்கிகள் முன்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்தச் சுவரொட்டியில் ஒருவருடைய பெயர் ஹரூண் அப்பாஸ் வாணி. இவர் எம்.பி.ஏ. பட்டம் படித்தவர் என்றும் காட் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டு அவருடைய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இன்னொருவர் மசூத் அஹ்மத், மஜ்மி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை அலுவலர் ஒருவர் பேசுகையில், "இரண்டு பயங்கரவாதிகளையும் தீவிரமாகத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாவோ பிடிப்போம். ஹரூண் என்பவர் மாநிலத்தில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் சேர்க்க தீவிரமாக செயல்பட்டுவருகிறார்" எனக் கூறினார்.