ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) தலைவர் யாசின் மாலிக் மீது பாரமுல்லா நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
யாசின் மாலிக்குக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை, பாரமுல்லா மாவட்ட நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பரிகார் முன்பாக, காணொலி காட்சி வாயிலாக காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்தியாவுக்கு எதிராக 2008 மற்றும் 2010ஆம் ஆண்டு மக்களை திரட்டிய குற்றத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாசின் மாலிக்கின் இயக்கத்தையும் சமீபத்தில் இந்திய அரசு தடை செய்தது.
தற்போது யாசின் மாலிக் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கையில், அவரும் காணொலி காட்சி வாயிலாக இணைந்திருந்தார்.