தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழப்பு - சுந்தர்பானி துறை

ஜம்மு: ராஜௌரி மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் உயிரிழந்துள்ளார்.

J-K: One army personnel killed in Sunderbani sector in ceasefire violation by Pakistan
J-K: One army personnel killed in Sunderbani sector in ceasefire violation by Pakistan

By

Published : Sep 16, 2020, 3:25 PM IST

பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று (செப். 15) ராஜௌரி மாவட்டத்திலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான சுந்தர்பானி துறையில் விதிமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விதிமீறி தாக்குதல் நடத்தியது.

இந்தச் சம்பவத்தின்போது நாயக் அனீஷ் தாமஸ் என்ற வீரர் பலத்த காயமடைந்த நிலையில் நேற்று வீரமரணமடைந்தார்.

நாயக் அனீஷ் தாமஸ் ஒரு தைரியமான மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் அளிக்கும் வீரர். இவருடைய தியாகத்தை நாடு எந்நாளும் போற்றி வணங்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details