தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீங்கள் இளைஞர்களுக்கு உத்வேகம்! - கிரிக்கெட் வீரரைப் பாராட்டிய துணைநிலை ஆளுநர் - கிரிக்கெட் வீரரை பாராட்டிய துணை நிலை ஆளுநர்

ஸ்ரீநகர்: ​​காஷ்மீரைச் சேர்ந்த வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரரான ஷபீர் அஹ்மத் நெங்கிரூவை சந்தித்து, அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா  பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

நிங்கள் ஏராளமான இளைஞர்களுக்கு "உத்வேகம்" அளிக்கிறீர்கள்- கிரிக்கெட் வீரரை பாராட்டிய துணை நிலை ஆளுநர்
நிங்கள் ஏராளமான இளைஞர்களுக்கு "உத்வேகம்" அளிக்கிறீர்கள்- கிரிக்கெட் வீரரை பாராட்டிய துணை நிலை ஆளுநர்

By

Published : Sep 15, 2020, 4:26 PM IST

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரரான ஷபீர் அஹ்மத் நெங்கிரூவை சந்தித்து பேசிய அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, யூனியன் பிரதேசத்தில் வாழும் ஏராளமான மக்களுக்கு தாங்கள் உத்வேகம் அளிப்பதாகப் பாராட்டினார். மேலும், கிரிக்கெட் வீரர் ஷபீருக்கு தன்னால் சாத்தியமான அனைத்து ஆதரவையும் அளிப்பதாகவும், மென்மேலும் வெற்றி அடையவும் வாழ்த்தினார்.

கிரிக்கெட் வீரர் ஷபீரை துணைநிலை ஆளுநர் சந்தித்தது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை ட்வீட் செய்துள்ளது. அதில், "துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​இன்று காஷ்மீரைச் சேர்ந்த வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் ஷபீர் அஹ்மத் நெங்ரூவைச் சந்தித்து, அவரது விளையாட்டுத் திறனைப் பாராட்டினார்.

மேலும் அவர் ஏராளமான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் கூறினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details