காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதியை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
இதை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டத்தின்படி கருத்து சுதந்திரத்தின் ஒரு அங்கமாக இணைய சேவைகள் பார்க்கப்படுகிறது. மக்கள் அமைதி வழியில் போராட்டத்தை மேற்கொள்ளலாம். ஊடகம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தது.