தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - நாட்டு குண்டு வீச்சு

ஜம்மு: பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 10 பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஜம்முவில் நடந்தேறியுள்ளது.

JK Grenade attack

By

Published : Oct 5, 2019, 4:28 PM IST

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் உள்ள காவல் துணை ஆய்வாளர் அலுவலகம் முன்பாக பயங்கரவாதிகள் இன்று காலை 11 மணிக்கு நாட்டு வெடிகுண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் காயமுற்றனர்.

காயமுற்றவர்கள் அப்பகுதியில் நடந்த பாதசாரிகள் 8 பேர், ஒரு காவலர், ஒரு பத்திாிகையாளர் ஆவார். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்பு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடந்தது. அந்த தாக்குதல் நமது ராணுவ வீரா்களை குறி வைத்து நடத்தப்பட்டது.

மேலும், இந்த நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details