காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டம் லவ்டாரா கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை! - பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் துப்பாக்கிச் சூடு
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்குப் பாதுகாப்புப் படையினரும் திருப்பி சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது குறித்து ராணுவம் விசாரித்து வருகிறது.