தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்... இரண்டு வீரர்கள் உயிரிழப்பு! - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு

காஷ்மீர்: குப்வாரா மாவட்டத்தின் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

ter
er

By

Published : Oct 1, 2020, 5:52 PM IST

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகிறது.

எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்து வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இன்று (அக்.1) அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் மற்றும் பிற ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

உடனடியாக நிலைமையை சுதாரித்த இந்திய ராணுவமும், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து அனுப்பினர். இருப்பினும் இந்த தாக்குதலில்,15 சீக்கிய லைட் காலாட்படையை சேர்ந்த ஹவல்தர் குல்தீப், 8 ஜே.ஏ.கே. ரைஃபிள்ஸை சேர்ந்த ரைபிள்மேன் சுபாம் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், நான்கு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று, மான்கோட் மற்றும் கிருஷ்ணா காதி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

கடந்த இரண்டு நாள்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details