ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் தொழில்முனைவோர், வர்த்தகர்களை மத்திய தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் நேற்று சந்தித்தார். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு புதிதாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு தொழில்துறை முதலீடுகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளுடன் அமைச்சர் சோம் பிரகாஷ் விரைவாக உரையாடினார். அதன்பின் பேசிய சோம் பிரகாஷ், 'ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் புதிய தொழில்கொள்கையை விரைவில் மத்திய அரசு உருவாக்கவுள்ளது. பிற தொழில்முனைவோர்களுடன் உள்ளூர் தொழில்முனைவோரும் ஆக்கப்பூர்வாக இயங்கும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தித் தரும். பல்வேறு அரசியல், பொருளாதாரத் தடைகள் காரணங்களால் நீண்ட நாட்களாக இப்பகுதி பின்தங்கியுள்ளது.