ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து தொலைத்தொடர்பு துண்டிப்பு, ஆங்காங்கே போராட்டங்கள் என அம்மாநிலத்தில் பெருவாரியான இடங்களில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒரு மாதங்காலமாக ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் சூழ்நிலை குறித்து தெரிவிக்கும் வகையில், அம்மாநிலத்தின் அனைத்து கட்சிகள் ஹூரியத் கான்ஃபிரன்ஸ் அமைப்பு (All Parties Hurriyat Conference) சார்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படுவதாகப் தெரிவிக்கப்டடிருந்தது.
அதற்காக ஸ்ரீநகரை அடுத்த ஹதர்போர (Hyderpora) பகுதியில் உள்ள அனைத்து கட்சிகள் ஹூரியத் கான்ஃபிரன்ஸ் அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி வீட்டு அருகே புகைப்படப் பத்திரிகையாளர் உட்பட 35 ஊடகவியாளர்கள் காலை 10.30 மணியளவில் வந்திருந்தனர்.