வடக்கு காஷ்மீர், குப்வாராவின் லோலாப் வனப்பகுதியில் ஜம்மு-காஷ்மீர் காவலர்கள், இந்திய ராணுவத்தினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை கைதுசெய்தனர்.
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கைது!
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை காவல் துறையினரும், இந்திய ராணுவமும் இணைந்து கைதுசெய்துள்ளனர்.
J&K Police
கைதுசெய்யப்பட்ட மூவரும் சமீபத்தில்தான் பயங்கரவாதக் குழுவில் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாள்களாக இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தொடர்ந்து சண்டை நடந்து வரும் இச்சூழலில், மூன்று பயங்கரவாதிகள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பிரிவினைவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் மோதல்