ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடந்தது. சரக்கு வாகனத்தில் ஆப்பிள்கள் ஏற்றிவந்த ஓட்டுநரை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தச் சுவடு மறைவதற்குள் அடுத்த தாக்குதலை பயங்கரவாதிகள் அறங்கேற்றியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சத்தீஸ்கர் தொழிலாளி சுட்டுக்கொலை - ஐம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான்
புல்வாமா: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சத்தீஸ்கர் வியாபாரியை சுட்டுக் கொன்றனர். வாகன ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்ட இரு நாள்கள் கூட ஆகாத நிலையில் அடுத்த வெறியாட்டத்தை பயங்கரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் புல்வாமா பகுதியில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அந்தத் தொழிலாளியை கடத்திச்சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கும் சட்டப்பிரிவு 370 அண்மையில் நீக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக தெற்கு காஷ்மீர் பகுதியான அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மூன்று பேர் என்கவுன்ட்டரில் இன்று வேட்டையாடப்பட்டனர்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை