தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெற்கு காஷ்மீரில் துண்டிக்கப்பட்ட இணைய சேவை - எட்டு கட்டங்களில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுவரும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலைக் கருத்தில்கொண்டு தெற்கு காஷ்மீர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

J&K: Internet services have been snapped in South Kashmir
J&K: Internet services have been snapped in South Kashmir

By

Published : Dec 7, 2020, 12:10 PM IST

ஜம்மு: காஷ்மீரில் நகர்ப்புறம், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்காக எட்டு கட்டங்களில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நான்காம்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

டிசம்பர் 04ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம்கட்ட தேர்தலின்போது அப்னி கட்சியுடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதி அனீஸ் உல் இஸ்லாம் நீக்கப்பட்டதால் தெற்கு காஷ்மீர் பகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. எனவே, இன்று நடைபெறும் தேர்தலின் பாதுகாப்பக் கருதி இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேலும், தெற்கு காஷ்மீர் பதற்றமான தொகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இணைய பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ஆர்பிஐ!

ABOUT THE AUTHOR

...view details