தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆன்லைன் மோசடி வழக்கு: நேரில் ஆஜராக பேஸ்புக் நிர்வாக இயக்குநருக்கு சம்மன் - தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000

ஜம்மு: ஆன்லைன் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நவம்பர் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பேஸ்புக்கின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநர், பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் இயக்குநர், குவாட்ரண்ட் டெலிவென்ச்சர்ஸ் லிமிடெட் இயக்குநர், எஸ்பிஐ மேலாளர் ஆகியோருக்கு  ஜம்மு-காஷ்மீர் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

ஆன்லைன் மோசடி வழக்கு: நேரில் ஆஜராக பேஸ்புக் நிர்வாக இயக்குநருக்கு சம்மன்
ஆன்லைன் மோசடி வழக்கு: நேரில் ஆஜராக பேஸ்புக் நிர்வாக இயக்குநருக்கு சம்மன்

By

Published : Oct 23, 2020, 10:05 AM IST

ஆன்லைன் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக பேஸ்புக்கின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநர் அஜித் மோகனை வரும் நவம்பர் 12ஆம் தேதி நேரில் ஆஜராக ஜம்மு-காஷ்மீர் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சிம்ரந்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ஜம்முவை சேர்ந்த விவேக் சாகர் என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் கீழ் அளித்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 4 விழுக்காடு வட்டிக்கு கடன் பெறுவதற்காக ரூ.20 ஆயிரத்து 700 டெபாசிட் செய்யக்கூறி தன்னிடம் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், பேஸ்புக் மற்றும் பிற நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை மீறியுள்ளதாகவும் விவேக் சாகர் புகார் அளித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 46இன் கீழ், தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலர் புகார்களை கையாண்டு தீர்ப்பளிக்கும் அலுவலராக செயல்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details