தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஃபரூக் அப்துல்லாவை சந்திக்கலாம்! - ஆளுநர் அனுமதி

ஸ்ரீநகர்: வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவையும், துணைத் தலைவர் உமர் அப்துல்லாவையும் சந்திக்க அக்கட்சி பிரதிநிதிகளுக்கு ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் அனுமதியளித்துள்ளார்.

farooq

By

Published : Oct 6, 2019, 1:28 AM IST

Updated : Oct 6, 2019, 6:22 AM IST

ஜம்மு - காஷ்மீர் சிறப்புத் தகுதி நீக்கத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீரில் உள்ள காங்கிரஸ், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான தேவேந்திர சிங் ராணா வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோரை சந்திக்க விரும்புவதாக ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு தேவேந்திர சிங் ராணா கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மாலிக், தேவேந்திர சிங் ராணா தேசிய மாநாட்டு கட்சி பிரதிநிதிகளுடன் சென்று ஃபரூக் அப்துல்லாவையும், உமர் அப்துல்லாவையும் சந்திக்க அனுமதியளித்துள்ளார்.

இதையும் படிங்க :ஃபரூக் அப்துல்லா மீது பாய்ந்த பிஎஸ்ஏ சட்டம்

Last Updated : Oct 6, 2019, 6:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details