தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரி பாதியாகப் பிரிந்த ஜம்மு-காஷ்மீர்! - சரி பாதியாக பிரிந்த ஜம்மு - காஷ்மீர்

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், அதன் சொத்துக்கள், கடன்கள், நிர்வாகப் பதவிகள் ஆகியவையும் சரி பாதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

By

Published : Nov 1, 2020, 2:33 AM IST

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் சொத்துக்கள், கடன்கள், நிர்வாகப் பதவிகள் ஆகியவையும் சரி பாதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019இன்படி, மாநிலத்துக்கு சொந்தமான சொத்துக்கள், கடன்கள், நிர்வாகப் பதவிகள் ஆகியவை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதை ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார். அக்டோபர் 31ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும்.

ஜம்மு காஷ்மீர் அல்லது லடாக் எனக் குறிப்பிடும் பட்சத்தில், அந்தந்த யூனியன் பிரதேசங்களின் புவிசார் பகுதிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அல்லது அவற்றின் அரசுகளை குறிக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி, மாநிலத்தை இரண்டு பாகங்களாகப் பிரிக்க, ஐஏஎஸ் அலுவலர் சஞ்சய் மித்ரா தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, ஆலோசனைக்குப் பிறகு தேவையான அனைத்துத் உத்தரவுகளையும் அமைச்சரவை பிறப்பித்தது. இறுதியாக, ஆணையத்தின் பரிந்துரைகளை ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details