இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ட்ரம்ப் தனது குடும்பத்தினரோடு தாஜ் மஹாலைக் காண்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு தனது விமானம் மூலம் சென்றார்.
'தாஜ் மஹாலின் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைக்கிறது' - ட்வீட் செய்த இவாங்கா ட்ரம்ப் - ட்வீட் செய்த இவான்கா ட்ரம்ப்
காதல் சின்னமாக விளங்கும் தாஜ் மஹாலின் ஆடம்பரமும் அழகும் தன்னை பிரமிக்க வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
தாஜ் மஹால் அமைந்துள்ள இடத்தை அடைந்த டொனால்ட் ட்ரம்பும், அவரது குடும்பத்தினரும் யமுனை ஆற்றின் அழகை ரசித்தவாறு அங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றின் முன்னர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜெரட்டும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் தாஜ் மஹாலின் அழகைக் கண்டு வியந்த இவாங்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் தாஜ் மஹாலின் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:டிரம்பை வைத்து மோடியை வம்பிழுத்த சிவசேனா!