ஆந்திர மாநிலம் விசாகாப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ராசாயண நிறுவனத்தில் இருந்து ஸ்டைரீன் வாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் மேலும் பலபேர் இந்த விஷவாயுவினால் பாதிக்கப்பட்டனர்.
இதனை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம், குழு ஒன்றை அமைத்தது ஓய்வு பெற்ற நீதிபதி சேஷயானா ரெட்டியை இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டிருந்து. அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி சேஷயானா ரெட்டி, தன் விசாரணையை முடித்து தேசிய பசுமை தீர்பாயத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவன ஊழியர்கள் இந்த விஷவாயுக் கசிவை தடுக்க தவறிவிட்டார்கள், அவர்களின் இந்த அலட்சியப்போக்கினால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
விபத்து நடந்த கடந்த மே 7ஆம் தேதியன்று இரவு 2.42 மணியளவில் ஸ்டைரீன் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அந்நிறுவனத்தில் உள்ள எச்சரிக்கை ஒலி 2.54 மணியிலிருந்து - 3.02 மணிவரை ஒலித்தது. மேலும் இரவு பணியில் இருந்த ஊழியர்கள் மற்ற ஊழிர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.