மத்தியப் பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
'ராகுல் வழி நடத்த வேண்டிய நேரம் இது' - 'ராகுல் வழி நடத்த வேண்டிய நேரம் இது'
பெங்களூரு: ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை முன்னின்று வழி நடத்த வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்தியப் பிரதேசத்தில் என்ன நடந்தாலும் ஒன்று மட்டும் உறுதியாகியுள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை முன்னின்று வழி நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவரும் மூத்தத் தலைவர்களும் கட்சியில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்த வேண்டிய நேரம் இது. இதனை இப்படியே விட்டுவிடக்கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தேவை. அவருக்கும் கட்சி தேவைப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாட்டி வழியில் பேரன்; திரும்பிய சிந்தியா குடும்பத்தின் வரலாறு