டெல்லியில் மக்களவைத் தேர்தல் மே 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தலைநகரை கைப்பற்ற தேர்தல் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சர் விஜய் கோயல் பரப்புரை மேற்கொள்கையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், 'கடந்த மூன்று நாட்களில் பாஜக எங்கள் கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து, ரூ.10 கோடிக்கு பேரம் பேசியுள்ளது.
ஆம் ஆத்மி தலைவர்களை பாஜகவால் ஒரு போதும் விலைக்கு வாங்க முடியாது. அதனால் பேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, தேர்தல் களத்தில் மோதுங்கள்' என சவால் விட்டார்.