தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2020, 5:37 PM IST

ETV Bharat / bharat

ஆக்ஸிஜன் அளவை கணக்கிடுவது உயிர்களை காக்கும்!

ஹைதராதாத்: உலகை ஆட்டிப்படைக்கும் கரோனா தொற்று, ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை குறைக்கிறது. மக்கள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும். ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும்போது பக்கவாதம் ஏற்படும் ஆபத்துள்ளதாக தொற்று நோயியல் வல்லுநர் பேராசிரியர் விஜய் யாதவெண்டு தெரிவித்தார்.

monitor oxygen level frequently
monitor oxygen level frequently

உலகெங்கும் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பொதுமக்கள் கரோனா அறிகுறிகள் குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.

இது தொடர்பாக, அமெரிக்காவின் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் வல்லுநர் பேராசிரியர் விஜய் யாதவெண்டு ஈடிவி பாரத்திற்கு பேட்டி அளித்தார்.

அதில் பேராசிரியர் விஜய், "இந்த வைரஸ் ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜனை பாதிக்கிறது. எனவே, வைரஸ் அறிகுறிகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒருவர் உடலிலுள்ள ஆக்ஸிஜன் அளவை அவ்வப்போது சோதிக்க வேண்டும்.

உலகை ஆட்டிப்படைக்கும் கரோனா தொற்று, ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவை குறைக்கிறது. மக்கள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும். ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும்போது, மயக்கமடையும் ஆபத்து உள்ளது. மேலும், இதனால் ரத்தம் உறைந்து போகலாம்.

இது அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும். இந்தியாவில், தற்போது கரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது. ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நோய் பரவுவதைத் தடுப்பது என்பது இங்கே சிறப்பாக உள்ளது.

பொதுவாக, ரத்தத்தில் 90 முதல் 95 மில்லிமீட்டர் வரை ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். ஆனால், இது 85க்கு கீழ் குறைந்தால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலைகளில், செயற்கையான முறையில் அவர்களுக்கு ஆக்ஸிஜனை வழங்க வேண்டும். இல்லையெனில், நோயாளிகள் மயங்கும் நிலை ஏற்படும்" என்றார்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு கணிக்கமுடியாத அளவுக்கு குறைவதை இங்கிலாந்து மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது போன்ற சூழலில், பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கையான முறையில் ஆக்ஸிஜனை வழங்குவதோடு, டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டும் அளிக்கப்படுகிறது. இது நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸ்டீராய்டு என்பதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் டெக்ஸாமெதாசோனை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மருத்துவ பரிசோதனை முறைகள்

தொடர்ந்து கரோனா பரிசோதனைகள் குறித்துப் பேசிய அவர், "கரோனா பரிசோதனைகள் பல முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. , கரோனா அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களுக்கு ரேப்பிட் ஆன்டிஜென் சோதனைகள், RT PCR சோதனைகள் செய்யலாம். அதேபோல ரத்தத்திலுள்ள புரத சதவீதத்தின் அளவை கணக்கிட உதவும் ஃபெராடின் சோதனைகளும் நடத்தப்படுகிறது.

இங்கு தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. இந்த காலநிலையில் காய்ச்சல் என்பது பொதுவாகவே ஏற்படும். இதனால் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அவர் கரோனா குறித்து பயப்படத் தேவையில்லை. இந்த காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பொதுவாகவே ஏற்படும். எனவே, யாராக இருந்தாலும் முறையான ரத்த பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவர்களின் மேற்பார்வையில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்படும் சிலரை நிமோனியா தாக்குகிறது. சில நேரங்களில், நுரையீரல் முழுக்க வெள்ளை ரத்த அணுக்களால் நிரப்பப்படுவதாக இத்தாலி மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். முடக்கு வாதத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்தி இதை தடுக்க முடியும்.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலில் வீக்கம் இருக்கும். அதற்கு பொருத்தமான மருந்துகள் கொடுக்க வேண்டும். சில சமயம் ரத்த நாளங்கள் சேதமடையகக் கூடும். இவ்வாறு ஏற்படும்போது மருந்துகளுடன், ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் மருந்தை அளிக்க வேண்டும். இதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றலாம், பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்" எனத் தெவித்தார்.

இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளால் பெரிதாக எவ்வித பயன்களும் இல்லை என்பதை இங்கிலாந்து சுகாதார வல்லுநர்கள் உறுதிப்படுத்தினர். தற்போது, ​​அவற்றின் பயன்பாடு கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அமெரிக்காவில் சில காலம் விரிவாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவை பலனைத் தரவில்லை.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போக்குவரத்தைவிட அமெரிக்கா-சீனா, சீனா-ஐரோப்பா, ஐரோப்பா-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து அதிகம். இதனால் பல வழிகளில் அமெரிக்காவிற்குள் வைரஸ் தொற்று பரவியது.

ஆனால், அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலைமை சற்று வித்தியாசமானது. மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவுள்ளது. அதுவே வைரஸின் தீவிரத்தன்மையை குறைக்கிறது என்றார்.

இதையும் படிங்க: உணவுத் தேடி சரணாலயத்திலிருந்து வெளிவந்த காண்டாமிருகங்கள்!

ABOUT THE AUTHOR

...view details