தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லைப் பாதுகாப்புப் படை வசம் டெல்லி கோவிட்-19 சிறப்பு மையம்! - டெல்லியின் மிகப் பெரிய கோவிட்-19 சிறப்பு மையம்

டெல்லி: டெல்லியின் மிகப் பெரிய கோவிட்-19 சிறப்பு மையம் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ITBP takes in  Covid Care Centre
ITBP takes in Covid Care Centre

By

Published : Jun 24, 2020, 8:20 PM IST

டெல்லியிலுள்ள 'ராதா சோமி பியாஸ்' என்ற கோவிட்-19 சிறப்பு மையத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து, அந்த மையத்தை இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை இன்று (ஜூன் 24) தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அப்படையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார். டெல்லி அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்தப் பொறுப்பை தங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பிரிதிநிகள் குழு ஒன்று ராதா சோமி பியாஸ் மையத்தை ஆய்வு செய்தது. பின்னர் டெல்லி அரசு, சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டது.

இன்னும் சில நாள்களில் இந்த மையத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இரண்டு ஆயிரம் பாரா மெடிக்கல் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் ஆகியோர் பணியமர்த்தப்படவுள்ளனர்.

மேலும், இம்மையத்தில் கூடுதலாக இரண்டு ஆயிரம் படுக்கை வசதிகளுக்குச் செய்துதரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், டெல்லியிலேயே அதிக படுக்கைகள் கொண்ட மிகப் பெரிய கோவிட்-19 சிறப்பு மையமாக இது உருவெடுக்கும்.

இதையும் படிங்க :2ஆம் உலகப்போரின் நினைவுதினம்: இந்திய வீரர்கள் ரஷ்யாவில் அசத்தல் அணிவகுப்பு

ABOUT THE AUTHOR

...view details