தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய-திபெத் எல்லை படையில் மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு! - இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை

டெல்லி: இந்திய- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் புதிதாக 8 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ITBP reports 8 fresh COVID-19 cases tally rises to 70 in ITBP Force total cases raised to 221 in ITBP Coronavirus positive cases in ITBP இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை கரோனா பாதிப்பு
ITBP reports 8 fresh COVID-19 cases tally rises to 70 in ITBP Force total cases raised to 221 in ITBP Coronavirus positive cases in ITBP இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை கரோனா பாதிப்பு

By

Published : Jun 26, 2020, 7:42 AM IST

இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் (ஐடிபிபி) கடந்த 24 மணி நேரத்தில் எட்டு வீரர்கள் கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஐடிபிபி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஐடிபிபி படையில் புதிதாக கரோனா பாதிப்பாளர்கள் எட்டு பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 221 பேர் நோய்த்தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து சிகிச்சைக்கு பின்னர் மீண்டுள்ளனர்.

கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 70 வீரர்களில் 18 பேருக்கு டெல்லியிலும், மீதமுள்ள 52 பேருக்கு நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்றார்.

நொய்டாவிலுள்ள மத்திய ஆயுதப்படை காவலர் மருத்துவமனையில், நாட்டின் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 122 வீரர்கள் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தகவல்கள் கூறுகின்றன.

இதுவரை கோவிட்-19 பெருந்தொற்று பாதிக்கப்பட்டு 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஐடிபிபி படைப் பிரிவை சேர்ந்தவர்.

இதையும் படிங்க: டெல்லியில் 24 மணி நேரத்தில் 3,390 பாதிப்பு, 64 உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details