இந்திய, சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டனர். மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற தொடர் தாக்குதலின்போது இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி) வீரர்கள் களத்தில் பெரும் பங்காற்றினர். அப்போது, சீனாவுக்கு எதிராக போராடிய ஐடிபிபியைச் சேர்ந்த 21 வீரர்களுக்கு, வீர தீர செயல்களுக்கான குடியரசுத் தலைவர் விருதை வழங்க வேண்டும் என இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பரிந்துரை செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, 294 ராணுவ வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் என ஐடிபிபி இயக்குநர் எஸ்.எஸ்.தேஷ்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தங்களை மட்டும் தற்காத்துக் கொள்ளாமல் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களை முன்னேற விடாமல் ஐடிபிபி வீரர்கள் சிறப்பாக செயலாற்றி, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.