71ஆவது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியிலுள்ள ராஜபாதையில் இன்று காலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். இதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், 17 ஆயிரம் அடி உயரத்தில் கடும் பனிப்பொழிவுக்கிடையே இந்தோ திபத் எல்லை காவல்படையினரால் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. லடாக் பகுதியில் தற்போது - 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிவவுகிறது.