இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களான ராகேஷ் சிங், பதம் சிங், பிரமோத் சிங், பிரதாப் சிங் ஆகியோர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக உத்தரப் பிரதேசம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.