தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சர் புட்டராஜூ வீட்டில் வருமான வரி சோதனை - அமைச்சர் புட்டராஜூ

கர்நாடகா: மண்டியாவில் உள்ள அமைச்சர் புட்டராஜூ வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் புட்டராஜூ வீடு

By

Published : Mar 28, 2019, 2:29 PM IST


கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி கூறிய ஒரு சில மணி நேரங்களில் மாநிலம் முழுவதும் உள்ள ஒப்பந்தாரர்கள் மற்றும் அரசு பொறியாளர் வீடுகள் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் மண்டியா மாவட்டம், பாண்டவபுராவில் உள்ள அமைச்சர் புட்டராஜூவின் இல்லத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஜத கட்சிக்கு அதிகளவில் அமைச்சர் புட்டராஜூ நிதி தருவதாக எழுந்த புகாரையடுத்து சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details