தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளும் வருமான வரித்துறையினர் - வருமானவரித்துறையினர்

நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்திலிருந்த விஜய்யை வருமான வரித்துறை அலுவலர்கள் தனியாக அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vijay
vijay

By

Published : Feb 5, 2020, 4:37 PM IST

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏஜிஎஸ் நிறுவனம், சினிமா தயாரிப்பு, விநியோகம், திரைப்படங்களுக்கு பைனான்ஸ் ஆகிய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து வருமான வரித்துறையினர் சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீட்டில், அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை இடத்திலும், ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் இந்த சோதனை காலை முதல் நடைபெற்று வருகிறது.

தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்ததையடுத்து, தற்போது நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்த விஜய்யை வருமான வரித்துறை அலுவலர்கள் தனியாக அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பாக அலுவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details