ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மத்திய புலானாய்வுத் துறை அதிகாரிகளிடம் வருவாய் துறை அலுவலர் சந்திர சேகர ரெட்டி லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தார். ராஜேஷின் வருவாய் துறை அலுவலகம் சார்ந்த பணிகளை சாதகமாக முடிப்பதற்கு ரூ 7 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அலுவலர் கையும் களவுமாக கைது
விசாகபட்டினம்: லஞ்சம் வாங்கிய அதிகாரியை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
லஞ்சம்
மேலும் ஏப்ரல் 29ஆம் தேதி 2 லட்ச ரூபாய், மே 3ஆம் தேதி 7 லட்ச ரூபாய் என லஞ்சப் பணத்தை இரு தவணைகளாக கொடுக்குமாறும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சந்திர சேகர ரெட்டி கூறியிருந்த தேதியிலேயே ராஜேஷ் ரூ 2 லட்சத்தைக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த மத்திய புலனாய்வுத் துறை அலுவலர்கள் சந்திர சேகர ரெட்டியைக் கையும் களவுமாக பிடித்தனர். வருவாய் துறை அலுவலர் லஞ்சம் வாங்கிய குற்றத்தில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.