புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்துள்ள வாட்ஸ்அப் செய்தியில், 'பேரவையில் உறுப்பினர் ஒருவர் பேசும்போது நான் மருத்துவர்களுக்கு எதிராக பேசியதாக கூறியுள்ளார். இது 100 விழுக்காடு உண்மைக்குப் புறம்பானதாகும். இதேபோல் அரசு ஊழியர்களின் மாத சம்பளம் உள்பட பல விவரங்கள் பற்றி தவறாக வெளியிடுவதாக என்று கூறியுள்ளார்.
'தன் மீது பழி சுமத்துபவர்கள் மனநல மருத்துவமனையை அணுகுவது நல்லது' - கிரண்பேடி - தன் மீது பழி சுமத்துபவர்கள் மனநல மருத்துவமனையை அணுகுவது நல்லது
புதுச்சேரி: தன்னை பற்றி பொய் புகார் கூறும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மனநல மருத்துவமனையை அணுகுவது நல்லது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாபில் என் வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக என் மீது வழக்கு உள்ளது என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் நான் வீட்டு உரிமையாளர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி வருகிறேன்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர், மக்களை திசை திருப்பும் வகையில் வேண்டுமென்றே என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்கள் எதற்காக அவ்வாறு கூறுகிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் அவர்கள் மனநல மருத்துவமனைகளை அணுகுவது சிறந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.