தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ரஹேஜா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IT Park) ஊழியர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் அப்பகுதி காவல் துறையினர், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட நபரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.