கர்நாடகா மாநிலத்தில் குறிப்பிட்ட பெருநகரங்களில் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்கம் விற்கப்படுவதாக வருமானவரித் துறையினருக்குத் தொடர் புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், பெங்களூரு சிக்கபேட் பகுதியில் கணக்கில் வராத தங்கம் விற்பதாக வருமானவரித் துறையினருக்குத் தகவல் கிடைத்தன்பேரில், அங்குள்ள 23 நகைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
பெங்களூரு நகை வியாபாரிகளிடமிருந்து கணக்கில் வராத ரூ.21 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!
பெங்களூர்: நகை வியாபாரிகளிடமிருந்து கணக்கில் வராத 21 கோடி ரூபாய் மதிப்பிலான 60 கிலோ தங்க நகைகளை வருமானவரித் துறையினர் பறிமுதல்செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
இந்தச் சோதனையில் வெளிமாநிலத்திலிருந்து தங்கம் வாங்கி விற்பனைசெய்யும் சில நகைக்கடைகள், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித ரசீதுகளும் வழங்காமல் விற்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வருமானவரித் துறையினர் கணக்கில் வராத 60 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல்செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் மதிப்பு 21 கோடியென சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: வன்முறையைத் தூண்டியதாக பிரபல கவிஞர் மீது வழக்கு