இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் இளந்தலைவருமான சச்சின் பைலட் ஊடகங்களிடையே பேசியபோது, "இந்தியா-சீனா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு, வேலை இழப்பு, வேலையின்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி போன்ற பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்புகிறார். மக்களின் குரலாக அவர் ஒலிக்கிறார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மத்திய அரசு முன்னெடுத்த அனைத்தும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மேலும் துணை நின்றதே ஒழிய, மக்களைப் பாதுகாக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய பிரச்னைகள் அனைத்தும் 100% நியாயமானவை.
நாடு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நிற்கிறது. தொழில்சாலைகள், ஆலைகள், பெரும் நிறுவனங்கள், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 2.10 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.