ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கத்தாரில் இருந்து கேரளாவின் கோழிக்கோடுக்கு வருவதாக தேசிய புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கோழிக்கோடு விமான நிலையத்திற்குச் சென்ற தேசிய புலனாய்வுத் துறையினர் கத்தாரில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்தனர். அதில் ஷிபுநிகார் என்ற பயணி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என்பது தெரியவந்தது.
கோழிக்கோடு விமானநிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் கைது - arrested
டெல்லி : கத்தாரில் இருந்து கேரளா திரும்பிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரை தேசிய புலனாய்வுத் துறையினர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 2016-17ஆம் ஆண்டு சிரியாவிற்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றதும், அங்கு சிரியா அரசிற்கு எதிராக பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அதன்பிறகு கேரளா வந்த இவர், சில இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிரியாவிற்கு அனுப்பிவைத்ததும் தெரியவந்தது.
அவரிடம் பயங்கரவாத அமைப்பில் இணைந்து பயிற்சிபெற்ற அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.