தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இஸ்ரோ, ஏரிஸ் - புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏரிஸ்

விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு, வானியற்பியல் போன்ற துறைகளுக்கான ஒத்துழைப்புக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவும் (ISRO), ஆர்யபட்டா ஆராய்ச்சி ஆய்வு நிறுவனமும் (ARIES- ஏரிஸ்) கையெழுத்திட்டன.

ISRO signs MoU with Aries
ISRO signs MoU with Aries

By

Published : Jun 7, 2020, 6:40 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவும் (ISRO), ஆர்யபட்டா ஆராய்ச்சி ஆய்வு நிறுவனமும் (ARIES-ஏரிஸ்) விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (SSA), வானியற்பியல் (Astrophysics) ஆகிய துறைகளுக்கான ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

விண்வெளி பொருள்களின் சுற்றுப்பாதை கண்காணிப்பு, அதன் பகுப்பாய்வு, விண்வெளி வானிலை ஆய்வுகள் ஆகியவை எஸ்எஸ்ஏக்கு அதிமுக்கியமானவை. விண்வெளி குப்பைகள், கழிவுகள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து இந்திய விண்வெளி சொத்துக்களை பாதுகாக்க விண்வெளி குறித்த பகுப்பாய்வு பயன்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது விண்வெளி பொருள் கண்காணிப்பு, விண்வெளி வானிலை, வானியல் ஆகியவற்றில் இஸ்ரோ, ஏரிஸ்ஸுக்கு இடையே எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு வழி வகுக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இஸ்ரோ செயலாளர் ஆர். உமாமஹேஸ்வரன், ஏரிஸ் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) தீபங்கர் பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details