தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலவில் தரையிறங்கத் தயாராகும் விக்ரம் - சவாலான நொடிகளை எதிர்நோக்கி இஸ்ரோ!

நிலவில் தென் துருவத்தில் பிரக்யான் லேண்டர் தரையிறங்கவுள்ள நிகழ்வு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக அமையவுள்ளது.

chandrayaan 2

By

Published : Sep 6, 2019, 11:12 PM IST

நிலவில் தென் துருவத்தில் பிரக்யான் தரையிறங்கவுள்ள நிகழ்வு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக அமையவுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்யும் நோக்கில் இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை 24ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக விலகிய சந்திரயான் 2, ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது.

இதனை அடுத்து, 5 கட்டங்களில் படிப்படியாக சந்திரயான் 2 நிலவை நெருக்கிச் சென்றது. பின்னர், செப்டம்பர் 2ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து 'விக்ரம்' என்ற லேண்டர் பிரிந்து நிலவில் தரையிறக்கப் புறப்பட்டது.

சவாலான நொடிகள்:

சந்திரயான் 2 திட்டத்தின் சவாலான நிகழ்வு சனி நள்ளிரவு 1:30 மணிக்கு அரங்கேறவுள்ளது. ஆயிரத்து 471 கிலோ எடைகொண்ட 'விக்ரம்' நிலவின் தென் துருவத்தில் மென்ஸின்ஸ் சி (Manzinus C), சிம்பெலியஸ் என் (Simpelius N) ஆகிய கிரேடர்ஸ்களுக்கு இடையேயான சமப்பரப்பில் தரையிறங்கவுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும் இந்த தரையிறங்கும் நிகழ்வு பெரும் சவாலாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரக்யான் ஆய்வூர்தி

ஆய்வுப் பயணம்:

'விக்ரம்' நிலவில் தரையிறங்கியவுடன், அதிலிருந்து சக்கரங்களைக் கொண்ட ஆறு பிரக்யான் (சமஸ்கிருதத்தில் 'ஞானம்' என்று பொருள்) என்னும் ஆய்வூர்தி நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும்.

'விக்ரம்' தரையிறங்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் பயணிக்கவுள்ள பிரக்யான், சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடியது.

இதனிடையே, இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வோர்க் ( Indian Deep Space Network) தொழில்நுட்பம் மூலம் விக்ரம், பிரக்யானுடன் இஸ்ரோ தொடர்பில் இருக்கும்.

நிலவில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சந்திரயான் 2 விண்கலம் சுமார் ஓராண்டு செயல்பட்டுள்ள நிலையில், விக்ரமும், பிரக்யானும் 14 நாட்கள் செயல்படவுள்ளன.

விக்ரம் லேண்டர்

2008ஆம் இஸ்ரோவில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 1, நிலவில் (உறைநிலையில்) தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யவுள்ள சந்திரயான் 2 திட்டம் உலகளவில் விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'விக்ரம்' நிலவில் தரையிறங்குமேயானால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக ஆய்வூர்தியை நிலவில் தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்திய பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details