தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்திரயான்-2 எடுத்த நிலவின் இரண்டாவது புகைப்படம் - இஸ்ரோ வெளியீடு! - ISRO launched Lunar surface imaged by Chandrayaan2

விண்ணில் ஏவப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின், சந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பு

By

Published : Aug 26, 2019, 6:34 PM IST

Updated : Aug 26, 2019, 7:16 PM IST

சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வேறு எந்த நாடும் செய்யாத புதுமையான சாதனையாக, சந்திரயான்-2 நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில் தயாரிக்கப்பட்டது. சந்திரயான்-2 ஏவப்பட்ட நாளிலிருந்து சரியாக 48 நாட்களில் நிலவின் தென் துருவத்தை அடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இஸ்ரோ வெளியிட்ட நிலவின் இரண்டாவது புகைப்படம்

இந்நிலையில், சந்திரயான்-2 புதிதாக எடுத்த நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புகைப்படமானது ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பிலிருந்து 4375 கி.மீ., தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனவும்; சந்திரயான்-2வின் டெரய்ன் மேப்பிங் கேமரா-2 மூலம் எடுக்கப்பட்ட நிலவின் வடதுருவத்தின் புகைப்படம் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ வெளியிட்ட நிலவின் இரண்டாவது புகைப்படம்

இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று நிலவின் 2650 கி.மீ., தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

இஸ்ரோ வெளியிட்ட முதல் புகைப்படம்

நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-2 செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி அடையும் என ஏற்கனவே இஸ்ரோ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 26, 2019, 7:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details