சந்திரயான்-2 விண்கலத்தைக் கடந்த ஜூலை 22ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் உள்ள லேண்டர் நிலவில் நாளை அதிகாலையில் தரையிறங்க உள்ளது.
‘வேறு யாரும் செல்லாத இடத்திற்கு செல்கிறோம்’ - கே.சிவன் தகவல் - சந்திரயான் 2 தரையிறக்க செய்திகள்
பெங்களூரு: இஸ்ரோ தலைவர் கே.சிவன் 'வேறு யாரும் செல்லாத இடத்திற்கு நாம் செல்கிறோம்' என சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவது குறித்துக் கூறியுள்ளார்.
#Chandrayaan2Landing
இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், இதுவரை வேறு எவரும் செல்லாத இடத்திற்கு நாம் செல்கிறோம் எனக் கூறியுள்ளார். மேலும், சந்திரயான்-2 விண்வெளியில் விக்ரம் லேண்டர் சரியான நேரத்தில் தரையிறங்கும் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது. அதற்காக நாங்கள் இன்று இரவு வரை காத்திருக்கிறோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Last Updated : Sep 6, 2019, 4:34 PM IST