இயற்கை வளங்களைக் கண்டறிதல், பூமியை கண்காணிப்பது உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீ-சார்ட் 2 பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி. சி 48 என்ற ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி 48 - pslv
ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி 48 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இஸ்ரோ
அதன்படி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோளானது 37 டிகிரி சாய்வில் 576 கிமீ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
பி.எஸ்எல்.வி. ராக்கெட்டில் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் அமெரிக்காவின் ஆறு செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.