தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நபிகள் நாயகத்தின் கேலி சித்திரம் வரைந்த பிரான்ஸ்: நாகையில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் - Islamists protest in Nagapattinam

காரைக்கால் : நபிகள் நாயகத்தின் கேலி சித்திரம் வரைந்தது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு அதிபருக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகையில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 4, 2020, 7:23 PM IST

Updated : Nov 4, 2020, 8:18 PM IST

இஸ்லாமியர்களின் இறைத்தூதராக போற்றப்படுபவர் நபிகள் நாயகம். பிரான்ஸ் நாட்டில் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் வகையில், கேலி சித்திரம் வரைந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் பாடமாக கற்பிக்கப்பட்டுள்ளது.

இச்செயலுக்கு பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆதரவாக பேசியுள்ளார். இதனைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பிரான்ஸ் நாட்டு அதிபருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:வங்கியை முற்றுகையிட்டு இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

Last Updated : Nov 4, 2020, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details