பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பெங்களூரில் உள்ள பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டார்க் வலைதளம் மூலம் சிரியாவைத் தொடர்புகொண்டதாக ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், ராமநகராவைச் சேர்ந்த முஜீஜ் பேக் என்பது கண்டறியப்பட்டது. இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், இணையம் வாயிலாக இவர் பயங்கர ஆயுதங்களை வாங்கியதும் தெரியவந்தது.